Friday, March 27, 2015

உடல்வலியைப் போக்கும் உணவுகள்


உடல்வலியைப் போக்கும் உணவுகள்

அடிக்கடி உடல்வலி என்பவர்களின் உடலில் கால்சியச்சத்தும், செம்புசத்தும் குறைவாக இருக்கின்றன. இதனால்தான் உடல்வலி! கால்சியம் சத்து நிறைந்துள்ள பால், தயிர், கேழ்வரகு, வெங்காயம் போன்றவற்றை உணவில் நன்கு சேர்த்து வரவேண்டும். இத்துடன் செம்பு சத்து நிறைந்துள்ள உணவுகளையும் மதியம், இரவு சாப்பிடும்போது சேர்த்துக் கொள்ளவும். 

ஒரு செம்பு நிறையத் தண்ணீரை இரவில் வைத்து மூடி வைக்கவும். காலையில் எழுந்ததும் இந்தத் தண்ணீரை அருந்தவும். வீட்டில் எப்போதும் செம்புப் பாத்திரத்திலேயே குடிதண்ணீர் இருக்கட்டும். கைக்குத்தல் அரிசி, சம்பா ரவை, மீன், பாதரசம் பருப்பு, நண்டு, ஈரல், ஷெல்பிஷ், பீன்ஸ் போன்ற உணவுகளில் செம்புச்சத்து தாராளமாக இருக்கிறது. அசைவ உணவுக்காரர்கள் வாரம் ஒரு நாள் ஆட்டு ஈரல் சேர்த்துக் கொள்ளலாம்.

சைவ உணவுக்காரர்கள் இரண்டுவேளை பாசிப்பருப்புக் கூட்டுச் சேர்த்து வந்தால் போதும். போதிய அளவு செம்புச் சத்து உடலுக்குக் கிடைத்துவிடும். இதனால் உடல்வலி குறையும். தினமும் ஒருவேளை ஏதேனும் கீரை சேர்த்து வந்தால் இரும்புச்சத்தும் உடலுக்குக் கிடைத்துவிடும். இரும்புச்சத்தை ஹீமோகுளோபினாக செம்புதான் மாற்றுகிறது. இதனால் ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது.

இரவு நேரத்தில் செம்பு, இரும்புச்சத்து உள்ள உணவுகளைச் சாப்பிட்டதும் உடல்வலி உள்ளவர்கள் உடனே உறங்கிவிடுவதற்கு உண்மையான காரணம் இரும்புச்சத்தை செம்பு சத்து ஹீமோகுளோபினாக மாற்றியதுதான்.

செம்புச் சத்துள்ள உணவுகள் உடலில் புற்றுநோய்க் காரணிகள் உருவாகாமலும் தடுக்கின்றன.

மாம்பழ சீசனில் இரவு உணவிற்குப்பிறகு எந்த வயதுக்காரராக இருந்தாலும் சரி மாம்பழம் ஒன்று சாப்பிட்டதும் அன்று இரவு உடல்வலி, மனக்கவலை முதலியவற்றை மறந்து உடனே தூக்கிவிடுவார். காரணம், மாம்பழத்தில் தாராளமாக உள்ள இரும்புச்சத்துதான். இரத்தத்தை தூய்மையாக்கி உடல் உறுப்புகளை இது புதுப்பிக்கிறது. தசையின் திசுக்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதுடன் கார்பன்டை ஆக்ஸைடையும் வெளியேற்றிவிடுகிறது. 

இதனால் ஆக்ஸிஜன் கிடைக்கும் திசுக்கள் உடல்இறுக்கம், நோய்கள் முதலியவற்றிலிருந்து விடுதலை பெறுகின்றன. மேலும் தசைகள் உறுதியாகவும், உடல் மற்றும் மனம் சோம்பலின்றியும் இருக்கின்றன. மாம்பழமோ அல்லது இரும்புச்சத்து உள்ள வேறு உணவையோ சாப்பிட்டவர்கள் உடல்வலி குணமாகி புத்துணர்வுடன் தொடர்ந்து வாழமுடியும்.

இரும்புச்சத்து கிடைக்க தினமும் கீரை ஓர் எளிய வழி. ஆப்பிள், மீன், சோயா மொச்சை, அரிசி, காராமணி, டர்னிப் கீரை, பேரீச்சம்பழம், மாட்டுக்கறி போன்ற உணவுகளில் உடல்வலியைப் போக்கும் இரும்புச்சத்து போதிய அளவில் உள்ளன.

உடல்வலி குணமாவதற்காக ஆப்பிள், மீன், சோயா மொச்சை என்று தினமும் உணவில் இடம்பெற்றால் இந்த உணவுகள் முதலில் இரத்த சோகையைக் குணமாக்கும். இரண்டாவது உடலையும் பளபளப்பாக்கி இளமையான தோற்றத்தையும் ஏற்படுத்தித்தரும். இதயநோய்களும், புற்றுநோய்களும் இந்த மூன்று உணவுகளால் தடுக்கப்படுவதால் வாழ்நாளும் இயல்பாக நீடிக்கும். 

தினமும் சாப்பிடும் இட்லியிலும், சாதத்திலும் மீனிற்கு இணையான இரும்புச்சத்து இருப்பதால் இந்த இரண்டையும் தவறாமல் சாப்பிடவும். கோதுமையில் இரும்புச்சத்து குறைவாக இருக்கிறது. கோதுமை சாப்பிடும்போது பாசிப்பருப்பு கூட்டையும் தொட்டுக்கொள்ளப் பயன்படுத்தினால் இட்லியில் கிடைப்பது போல இரும்புச்சத்து கிடைக்கும். உடல்வலியைப் போக்கும் செம்புச்சத்தும் பாசிப்பருப்பில் இருக்கிறது.

உடல்வலியைப் போக்கும் மேற்கண்ட 23 உணவுகளும் மனதையும் உற்சாகமாக்கும். இதனால் சுறுசுறுப்புடனும் வாழமுடியும்.

இதயவலி உள்ளவர்கள் இரவு உணவிற்குப் பிறகு பிறகு மாதுளம் பழம் சாப்பிடலாம். இது, நெஞ்சுவலியை சரி செய்துவிடும்.

மாதவிடாய் கோளாறுகள் மற்றும் கிராம்பு மருத்துவ குணங்கள்

மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்..!

ஹோர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். 

* இதற்கு முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும்.

* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும்.

* உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள்

கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.

என்ன சத்து?

கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

என்ன பலன்கள்?

கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. ப‌ல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலு‌க்கு மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

சருமப் பிரச்னைகளுக்கு

கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.

துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

கராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது. நான்கு கிராம் கராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் வாந்திபேதி குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கராம்பு மிகச் சிறந்தது. கராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் உள்ளிச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில் ஆறு கராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்.

உணவு வகைகளில் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் வாசனை பொருட்களாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். அவை, உணவுக்கு வாசனை மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருபவை. அந்த வாசனைப் பொருட்களை, தற்போதும் சமையலில் பயன்படுத்தி வந்தாலும், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை. உணவில் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள் குறித்து, இந்திய பயிர் பதன தொழில் நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:

பட்டை

செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது.


Friday, March 20, 2015

கீரை சாப்பிடலையோ கீரை... கீரேய்..


கீரை சாப்பிடலையோ கீரை... கீரேய்.. கீர.. கீரேய்..

மூட்டு வலிக்கு முடக்கற்றான் ;

முதுமை குறைக்க பசலைங்க ;

வேட்டு வைக்கும் வாயுவை விரட்டும் வாதக் கீரைங்க ;

மீட்கும் இளமை தூதவளை ;

மினுக்க பொன்னாங் கன்னிங்க ; வாட்டி வதைக்கும் பிணியெலாம் வாரி யடித்தே ஓடுங்க !

அகத்தி வயிற்றுப் புழுக்களை அகற்றித் தள்ளும் வெளியேங்க ;

முகத்தில் பொலிவு பொங்கிட முருங்கைக் கீரை உதவுங்க ;

புகட்டும் மணத்தக் காளியும் புண்ணை ஆற்றுங் கீரைங்க ;

சகல சத்தும் நல்கிடும் சமச்சீர் உணவு கீரைங்க !

மூளை சிறக்க வல்லாரை;

முழுக்க செரிக்க வெந்தியம் ;

பாளைக் கீரை புளிக்கீரை

பருப்புக் கீரை ""காசினி""யும்

வேளை பார்த்துப் பகுத்துண்டால்

வேண்டும் நன்மை கிட்டுங்க ;

நாளை யென்று தள்ளாமல்

நாளுங் கீரை உண்ணுங்க !


மூலிகைகள் பற்றிய குறிப்புகள்


நாட்டு மருத்துவம் பகுதி 001-ல் கீழ்கண்ட 53 மூலிகைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன: 

அத்திப்பழம், அல்லி பூ, அவரைக்காய், உடல் பருமன், எலுமிச்சை, ஏலக்காய், கட்டுக்கொடி, கத்திரிக்காய், கரிசலாங்கண்ணி, கருவேப்பிலை, கழற்ச்சிகாய், கீழாநெல்லி, குப்பைமேனி, கேச பராமரிப்பு, கொத்தமல்லி, கொய்யா பழம், கோவைக்காய், சம்பங்கி பூ, சீதா பழம், சீந்தில், சீம அகத்தி, சீரகம், சேப்பகிழங்கு, சோற்று கற்றாழை, தக்காளி, துத்தி, தும்பை, துளசி, தொட்டாசுறுங்கி, நந்தியாவட்டை, நித்தியகல்யாணி, நிலவேம்பு, நல்வேளை, பப்பாளி, பருப்பு கீரை, பழத்தோள், புதினா, பூசனிக்காய், பூண்டு, மகிழம் பூ, மஞ்சள், மணத்தக்காளி, மிளகாய், முடகத்தான் கீரை, முருங்கைக்காய், முள்ளங்கி, ரோஜாப் பூ, லவங்கம், வாழை, வில்வம், வெங்காயம், வெண்டைக்காய், வெற்றிலை, வேப்பில்லை.

001: Collection of Naattu Maruthuvam


நாட்டு மருத்துவம் பகுதி 001-ல் கீழ்கண்ட 53 மூலிகைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன:

அத்திப்பழம், அல்லி பூ, அவரைக்காய், உடல் பருமன், எலுமிச்சை, ஏலக்காய், கட்டுக்கொடி, கத்திரிக்காய், கரிசலாங்கண்ணி, கருவேப்பிலை, கழற்ச்சிகாய், கீழாநெல்லி, குப்பைமேனி, கேச பராமரிப்பு, கொத்தமல்லி, கொய்யா பழம், கோவைக்காய், சம்பங்கி பூ, சீதா பழம், சீந்தில், சீம அகத்தி, சீரகம், சேப்பகிழங்கு, சோற்று கற்றாழை, தக்காளி, துத்தி, தும்பை, துளசி, தொட்டாசுறுங்கி, நந்தியாவட்டை, நித்தியகல்யாணி, நிலவேம்பு, நல்வேளை, பப்பாளி, பருப்பு கீரை, பழத்தோள், புதினா, பூசனிக்காய், பூண்டு, மகிழம் பூ, மஞ்சள், மணத்தக்காளி, மிளகாய், முடகத்தான் கீரை, முருங்கைக்காய், முள்ளங்கி, ரோஜாப் பூ, லவங்கம், வாழை, வில்வம், வெங்காயம், வெண்டைக்காய், வெற்றிலை, வேப்பில்லை.

Naattu Maruthuvam - அத்திப்பழம் - Aththi Pazham | Episode 44

Naattu Maruthuvam - அல்லி பூ - Water Lily | Episode 20 | Dt 05-12-14

Naattu Maruthuvam - அவரைக்காய் - Aavaarai | Episode 27

Naattu Maruthuvam - உடல் பருமன் - Obesity | Dt 12-03-15

Naattu Maruthuvam - எலுமிச்சை - Lemon | Episode 25

Naattu Maruthuvam | ஏலக்காய் - Cardamom | Episode 35 | Dt 29-12-14

Naattu Maruthuvam - கட்டுக்கொடி - Kattukodi | Episode 03 | Dt 12-11-14

Naattu Maruthuvam - கத்திரிக்காய் - Brinjal | Episode 39

Naattu Maruthuvam | குப்பைமேனி,தும்பை,கரிசலாங்கண்ணி | Dt 03-03-15

Naattu Maruthuvam | கருவேப்பிலை - Karuveppilai | Dt 06-03-15

Naattu Maruthuvam - கழற்ச்சிகாய் - Kazharchi Kaai | Episode 37

Naattu Maruthuvam - கீழாநெல்லி - Keezhanelli | Episode 32

Naattu Maruthuvam - கேச பராமரிப்பு - Hair Care | Dt 13-03-15

Naattu Maruthuvam - கொத்தமல்லி - Coriander | Episode 16 | Dt 01-12-14

Naattu Maruthuvam - கொய்யா பழம்_Guava fruit | Episode 42 | Dt 08-01-15

Naattu Maruthuvam | கோவைக்காய் - Little Gourd | Dt 16-03-15

Naattu Maruthuvam - சம்பங்கி பூ |  Episode 23

Naattu Maruthuvam | சீதா பழம்_Custard Apple | Episode 43 | Dt 09-01-15

Naattu Maruthuvam | சீந்தில்_Seenthil | Episode 41 | Dt 07-01-14

Naattu Maruthuvam - சீம அகத்தி - Seemai Agathi | Episode 24

Naattu Maruthuvam | சீரகம் - Cumin | Episode 12 | Dt 25-11-14

Naattu Maruthuvam - சேப்பகிழங்கு - Cheppankizhangu | Episode 45

Naattu Maruthuvam | சோற்று கற்றாழை - Sotru Katrazhai | Dt 05-03-15

Naattu Maruthuvam | தக்காளி_Tomato | Episode 47 | Dt 19-01-15

Naattu Maruthuvam - துத்தி - Thuthi | Episode 06 | Dt 17-11-14

Naattu Maruthuvam | தும்பை - Thumbai | Episode 15 | Dt 28-11-14

Naattu Maruthuvam | துளசி - Thulasi | Episode 10 | Dt 21-11-14

Naattu Maruthuvam - நந்தியாவட்டை - Nandhiyavattai | Episode 31

Naattu Maruthuvam - நித்தியகல்யாணி - Idukaattupoo | Episode 26

Naattu Maruthuvam - நிலவேம்பு - Chiretta | Episode 04 | Dt 13-11-14

Naattu Maruthuvam - நல்வேளை - Nal Velai - Ajagandha | Episode 30

Naattu Maruthuvam - பப்பாளி - Papaya | Episode 73 | Dt 26-02-15

Naattu Maruthuvam - பருப்பு கீரை | Episode 71 | Dt 24-02-15

Naattu Maruthuvam | பழத்தோள் - Benefits Of Fruits Skin | Dt 11-03-15

Naattu Maruthuvam | புதினா - Mint | Episode 19 | Dt 04-12-14

Naattu Maruthuvam - பூசணிக்காய் - Pumpkin | Episode 38

Naattu Maruthuvam - பூண்டு - Garlic | Episode 69 | Dt 20-02-15

Naattu Maruthuvam - மகிழம் பூ- தொட்டாசுறுங்கி | Dt 19-03-15

Naattu Maruthuvam - மஞ்சள் - Manjal | Episode 33

Naattu Maruthuvam - மணத்தக்காளி - Manathakkali | Episode 40

Naattu Maruthuvam - மிளகாய் - Chilly | Episode 72 | Dt 25-02-15

Naattu Maruthuvam | முடகத்தான் கீரை - Mudakathan Keerai | Episode 17 | Dt 02-12-14

Naattu Maruthuvam - முருங்கைக்காய் - Murungai | Episode 28

Naattu Maruthuvam - முள்ளங்கி, Radish | Episode 49

Naattu Maruthuvam - ரோஜாப்பூ - Benefits Of Rose Flower | Episode 22

Naattu Maruthuvam - லவங்கம் - Lavangam | Episode 36

Naattu Maruthuvam | வாழை - Vaazhai | Episode 14 | Dt 27-11-14

Naattu Maruthuvam | வில்வம் - Vilvam | Episode 09 | Dt 20-11-14

Naattu Maruthuvam - வெங்காயம் -Onion | Episode 18 | Dt 03-12-14

Naattu Maruthuvam - வெண்டைக்காய் - Vendaikaai | Episode 05 | Dt 14-11-14

Naattu Maruthuvam - வெற்றிலை - Betel Leaf | Episode 11 | Dt 24-11-14

Naattu Maruthuvam - வேப்பில்லை  |  Episode 34

'தொட்டாற்சுருங்கி..!


'தொட்டாற்சுருங்கி..!

காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்டு தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. 

தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி.

‘நமஸ்காரி' என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 

48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை அதிகரிக்கும். அதனால் ‘காமவர்த்தினி' என்றும் கூறுவர்.

இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும்.

தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக் காய்ச்சவும், பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். 

அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும்.

ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும்.

சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும்.

இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். 

இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குணமாகும்.'


Also visit Wikipedia linksSunday, March 1, 2015

நித்தியகல்யாணி மருத்துவப் பயன்கள்

Nithiyakalyani cures Cancer


நித்தியகல்யாணி மருத்துவப் பயன்கள் பற்றி சித்த மருத்துவர் திரு. க. சக்தி சுப்பிரமணி ஐயா அவர்களின் பொன்னுரை கீழே உள்ள லிங்கில் கேட்டுப் பயன்பெறுங்கள்: 
  


Also view the following links for more info about Nithiyakalyani :