Sunday, August 7, 2016

கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி

 
 

கருஞ்சீரகம் (Nigella sativa) சிறந்த நோய் நிவாரணி

குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். 

கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.

கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். 

கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். 

மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.

கருஞ்சீரகப் பொடியை ஒரு துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது. 

தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். 

5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும். 

கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. 

கருஞ்சீரகத்தைக் (vineger)ல் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.

கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம். 

கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும். 

நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.

கருஞ்சீரகத்தின் சிறந்த நோய் நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

For more info, visit the following links


http://aliaalifali.blogspot.in


http://chalynet.blogspot.in


http://www.ntamil.com


http://www.tamilmurasu.org


http://www.chenaitamilulaa.net

Saturday, February 27, 2016

Weight loss: கம்பு

உடல் எடையை குறைக்கும் கம்பு

2/25/2016 2:12:43 PMசிறுதானியமான கம்பு எளிதில் செரிமானம் ஆக கூடியது. பல்வேறு ஊட்டச் சத்துக்களை உள்ளடக்கியது. இதில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் உள்ளது. பித்தப்பையில் கற்கள் வராமல் தடுக்கிறது. கொழுப்பு சத்தை கரைக்க கூடியது. ரத்த அழுத்தத்தை போக்க கூடியது. உடலுக்கு உறுதி தரக்கூடியது. எலும்புகளுக்கு பலம் கொடுக்க வல்லது. 

ம்புவை பயன்படுத்தி குழந்தைகளுக்கான சிற்றுண்டி தயாரிக்கலாம். வேக வைத்த கம்புடன், தேங்காய் துருவல், சிறிது ஏலப்பொடி, நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதை குழந்தைகளுக்கு கொடுத்துவர அவர்களின் எலும்புகள் பலம் அடைகிறது. மலச்சிக்கல் சரியாகும். உள் உறுப்புகளை பலப்படுத்தும். மூச்சு திணறலை தடுக்கிறது. பசியை அடக்கி உடல் எடையை குறைக்கிறது. 

சளி, ஆஸ்துமா பிரச்னைகளுக்கு மருந்தாகிறது.கம்புவை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி, ஆரோக்கியம் கொடுக்கும் உணவு தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்

கம்பு, குதிரைவாலி அரிசி, தயிர், வெங்காயம், உப்பு. கம்பு, குதிரை வாலி அரிசியை வறுத்து அரைத்து களிபோன்று கிளறவும். இதை உருண்டைகளாக பிடித்து குளிர்ந்த நீரில் போட்டுவைத்தால் 3 நாட்கள் வரை கெட்டுப்போகாது.தேவையான உருண்டைகளை எடுத்து உப்பு சேர்க்கவும். சிறிது தயிர், நீர் விட்டு வெங்காயம் சேர்த்து கலந்து குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.

கம்புவை பயன்படுத்தி உப்புமா தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வேகவைத்த கம்பு, வெங்காயம், நல்லெண்ணெய், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம், கடுகு. பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். பெருங்காயம், கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்தவுடன் வெங்காயம் போடவும். இதனுடன் கம்பு சேர்க்கவும். தேவையான அளவு உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். இந்த உப்புமாவை சாப்பிட்டுவர உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.  

கம்புவை பயன்படுத்தி குழந்தைகளுக்கான சத்துமாவு கஞ்சி தயாரிக்கலாம். கம்பு, தினை, குதிரை வாலி, வரகு அரிசி, உளுந்தம் பருப்பு, முந்திரி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து எடுத்து, கட்டியில்லாமல் கரைக்கவும்.ஒரு பாத்திரத்தில் நாட்டு சர்க்கரையுடன் நீர்விடவும். ஏலக்காய் பொடி, சத்துமாவு கலவையை சேர்க்கவும். தேங்காய் துருவலை சேர்த்து வேக வைக்கவும். இதில் காய்ச்சிய பால் விட்டு கிளறவும். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இது பல்வேறு சத்துக்களை கொண்ட உணவாக விளங்குகிறது. நோய்களை தடுக்கும். 

பல்வேறு நன்மைகளை கொண்ட கம்பு குழந்தைகளின் மூச்சுதிணறலுக்கு மருந்தாகிறது. இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. சிறுதானியமான இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. மூளை, நரம்புக்கு பலம் தரக்கூடியது. படிக்கும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. சிறுதானியங்களை எடுத்துக்கொண்டால் நோய் வராமல் தடுக்கலாம்.  

நன்றி: சன் டி.வி.


Also visit the related linksPain and swelling: நெய்வேலி காட்டாமணக்கு


வலி, வீக்கத்தை போக்கும் நெய்வேலி காட்டாமணக்கு

2/26/2016 2:20:05 PM   

விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டதும், மாதவிலக்கை தூண்டக் கூடியதும், புண்களை ஆற்றவல்லதும், சர்க்கரை நோய்க்கு மருந்தாக அமைவதும், வலி மற்றும் வீக்கத்தை போக்க கூடியதும், மூட்டு வலியை குணப்படுத்த கூடிய தன்மையை பெற்றிருப்பதுமான நெய்வேலி காட்டாமணக்கு செடியின் மருத்துவ குணங்களை பற்றி நாம் பார்ப்போம். 

நீர்நிலைகள், சாலை ஓரங்களில் அதிகளவில் வளரக்கூடியது நெய்வேலி காட்டாமணக்கு. அடர்த்தியாக வளரும் இந்த செடியின் பூக்கள் பிங்க் நிறத்தில் அழகாக காட்சி அளிக்கும். இதற்கு மலை ஓணான் செடி, நெய்வேலி காட்டாமணி என்ற பெயர்களும் உண்டு. அற்புதமான பூக்களை கொண்ட செடி. 

பல்வேறு நன்மைகளை கொண்ட இதன் இலைகள், பூக்கள், வேர்கள் ஆகியவை மருந்தாகிறது. மாதவிலக்கை தூண்டக் கூடியதாகிறது. வெள்ளைப் புள்ளிகளுக்கு மேல்பூச்சாக பயன்படுகிறது. அடிபட்ட காயங்களை விரைவில் ஆற்றுகிறது. பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மையை கொண்டது.

நெய்வேலி காட்டாமணக்கு செடியின் வேரை பயன்படுத்தி மாதவிலக்கை தூண்டக்கூடிய மற்றும் மலச்சிக்கலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். 

இதற்கு தேவையான பொருட்கள்

நெய்வேலி காட்டாமணக்கு வேர், தனியா பொடி, கருஞ்சீரகம், நாட்டு சர்க்கரை. நெய்வேலி காட்டாமணக்கு வேரை நன்றாக காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். கால் ஸ்பூன் வேர் பொடி எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் தனியா பொடி, கால் ஸ்பூன் கருஞ்சீரகம், அரை ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இதை குடித்துவர மாதவிலக்கு பிரச்னை சரியாகும். மாதவிலக்கு தூண்டப்படுகிறது. மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.

நெய்வேலி காட்டாமணக்கு இலைகள் விஷத்தன்மை உடையதால் கால்நடைகள் சாப்பிடாது. இதை அளவோடு எடுத்துக்கொள்வதால் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. நெய்வேலி காட்டாமணக்கு சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. ஈரலுக்கு பலம் கொடுக்கிறது. நெய்வேலி காட்டாமணக்கு இலைகளை பயன்படுத்தி வலி மற்றும் வீக்கத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் விளக்கெண்ணெயை தடவி அதன்மீது நெய்வேலி காட்டாமணக்கு இலைகளை வைத்து சூடுபடுத்த வேண்டும். 

இலைகள் வதங்கிய பின்னர் வலி, வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வைக்கவும். இது வலியை போக்கும். வீக்கத்தை கரைக்கும். புண்கள் விரைவாக ஆறும். சீல் பிடிக்காது. நெய்வேலி காட்டாமணக்கு இலைகள் மூட்டு வலிக்கு மருந்தாக பயன்படுகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட இது, உள் மற்றும் மேல் மருந்தாக பயன்படுகிறது. நெய்வேலி காட்டாமணக்கு செடி விஷத்தன்மை உடையதால் அளவோடுதான் பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

நன்றி: சன் டி.வி. 

Friday, February 5, 2016

Proverbs about Food in-take Practice

“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்

* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்

* வாழை வாழ வைக்கும்

* அவசர சோறு ஆபத்து

* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

* இருமலை போக்கும் வெந்தயக் கீரை

* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.

* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

* சித்தம் தெளிய வில்வம்

* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

* சூட்டை தணிக்க கருணை கிழங்கு

* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

* வாத நோய் தடுக்க அரைக் கீரை

* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

* பருமன் குறைய முட்டைக்கோஸ்

* பித்தம் தணிக்க நெல்லிக்காய்

உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.

நலம் உடன் வாழ்வோம்.